Monday, December 26, 2011 0 comments

Christmas

Dear friends
Greetings of the season

below you will find two homilies for Christmas







Thank you

In Christ
Fr. Benzi sss
Thursday, December 8, 2011 0 comments

2nd Sunday of Advent

Dear friends,
greetings

Kindly click the link below to listen to the homily in Tamil




Thank you
Yours in Christ
Benzi sss
Tuesday, November 29, 2011 0 comments

1st Sunday of Advent

Dear Friends
Greetings of peace

Please click the link below to listen the homily in Tamil


Yours in Christ
Benzi sss
Tuesday, November 22, 2011 0 comments

Feast of Christ the King


Dear Friends,
Greetings

to listen to the homily in tamil kindly click the link below

http://www.4shared.com/audio/in_UgaDZ/christ_the_king.html


thank you

Yours in Christ
Benzi sss
Tuesday, November 15, 2011 0 comments

33rd Sunday


Dear Freinds,
Greetings

click the link below to listen to homily in tamil

http://www.4shared.com/audio/yfQuAvOi/131111.html

Yours in Christ
Benzi sss
Thursday, October 27, 2011 0 comments

30th Sunday

Dear Friends in Christ
Greetings

To listen to the homily in Tamil kindly click the link below

http://www.4shared.com/audio/nhWIUdNU/231011.html

thank you
Benzi sss
0 comments

29th Sunday

Dear Friends
Greetings...

to listen to the homily in Tamil please click the link below

http://www.4shared.com/audio/pnDM-4Nc/161011.html

thank you
Benzi sss
Monday, October 10, 2011 0 comments

28th Sunday

Der Friends in Christ
Greeting

tolisten to the homily in tamil kindly click down the link below

http://www.4shared.com/audio/E10vcMAu/91011.html


thanks
Benzi sss
Saturday, October 8, 2011 0 comments

27th sunday


Dear Friends in Christ

To listen to the homily in tamil kindly click the link below

http://www.4shared.com/audio/IPpnYACG/21011.html

thank you
Benzi sss
Tuesday, September 27, 2011 0 comments

26 th Sunday


Dear Friends,
Greetings

Kindly click the following link tolisten to the homily

http://www.4shared.com/audio/U-Shhscw/25911.html
thanks
Benzi sss
Monday, August 29, 2011 0 comments

22 Sunday

Greetings

Please click the link below to listen to the homily in tamil

http://www.4shared.com/audio/9ASZdQPv/28811.html

Benzi sss
Saturday, August 27, 2011 0 comments

21st Sunday

Dear Friends,
Greeting

sorry for the little break
I am back now
Kindly click the link below to listen the homily in Tamil

Benzi sss






Monday, July 11, 2011 0 comments

Fertile Land

Please Click down to listen to the homily in Tamil
15th sunday of the year A


http://www.4shared.com/audio/JIMyPMaG/15thsunA.html

benzi sss
Tuesday, July 5, 2011 1 comments

Feast of St. Thomas






Kindly click down to listen to the homily in Tamil

Benzi sss
Monday, June 27, 2011 0 comments

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா





Click here to listen to the homily
FEAST OF BODY AND BLOOD OF CHRIST HOMILY

பென்சி sss
Wednesday, June 22, 2011 0 comments

மூவொரு இறைவன் பெருவிழா


click down to listen to the homily in Tamil
Trinity sunday homily


பென்சி sss
Saturday, June 11, 2011 1 comments

தூய ஆவியின் பெருவிழா


இயேசு உயிர்த்த 50 –வது நாளில் தூய ஆவியானவர் தீ நாக்கு வடிவில் அப்போஸ்தலர்கள் மேல் இறங்கி வந்ததை நினைவு கூறுகின்ற இந்த நாளினை பெந்தகொஸ்தே திருவிழாவாக திருச்சபை கொண்டாடுகின்றது.
இன்றைய தினம் தூய ஆவியைப் பற்றி சிந்திப்பதே சிறந்ததாகும்.
தூய ஆவியானவரைப் பற்றி பல்வேறு வகையான புரிதல்கள் உள்ளன.  அவற்றில் பல தவறானவைகள். பலர் தூய ஆவியானவர் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகின்றனர்.
  1. தூய ஆவியானவர் ஓர் துணையாளர்: எப்போதும் நம்மோடு உடன் இருந்து உடன் நடக்கும் தூய ஆவியானவர் இயேசுவின் வாக்குறுதிக்கு ஏற்ப துணையாளராக இருக்கிறார்.
  2. தூய ஆவியானவர் ஓர் உதவியாளர்: துணையாக வருபவர் எப்போதும் நமக்கு உதவி செய்பவராகவும் இருக்கின்றார்.
  3. தூய ஆவியானவர் ஓர் அறிவிப்பாளர்: நாம் தவறும் போதும், தடுமாறும் போதும், வழிமாறும் போதும் நம் மனசாட்சியாக சரி எது தவறு எது என்று நமக்கு அறிவிப்பவர்.
  4. தூய ஆவியானவர் ஓர் பயிற்சியாளர்: எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் பயிற்சியாளர் தேவை. நம்மை பக்குவப் படுத்துகின்ற, பண் படுத்துகின்ற பயிற்சியாளராக தூய ஆவியானவர் இருக்கின்றார்.
இந்த பெந்தகொஸ்தே பெருவிழாவிழாலே இவர் நம்மையும் ஆட்கொள்ள, அபிஷேகம் செய்ய வேண்டிடுவோம்.
பென்சி sss


Sunday, June 5, 2011 0 comments

இயேசுவின் விண்ணேற்ப்புப் பெருவிழா


மறையுரை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
http://www.4shared.com/audio/w0LR0H2t/Ascension.html

பென்சி sss
Saturday, May 28, 2011 0 comments

6-ம் உயிர்ப்பு ஞாயிறு

இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனுமே அன்பில் வாழ ஆசைப்படுகின்றான்
தான் அன்பு செய்யவும் தன்னை அன்பு செய்யவும் உண்மையான ஓர் உயிருக்காக ஒவ்வொரு உயிரினமும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது
நிலையான அன்பு, நிறைவான அன்பு, நிபந்தனையற்ற அன்பு இறைவன் ஒருவனிடம் தான் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருக்கின்றோம்
நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இறைவன் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருக்கின்றார்.
ஆனால் நாம் அவர் மீது அன்பு கொண்டிருக்கின்றோமா?
நாம் அவர் மீது கொண்டிருக்கின்ற அன்பிற்கு சாட்சி என்ன என்பதைத் தான் இன்றைய நற்செய்தி நமக்கு கூறுகின்றது
 “நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளை கடைபிடிப்பீர்கள்” 14:15
இறைவனின் கட்டளைகளை கடைபிடிப்பதில் தான், நாம் அவர் மீது கொண்டுள்ள அன்பு வெளிப்படுத்தப் படுகின்றது
இயேசு தந்த ஒவ்வொரு கட்டளைகளுமே அன்பை வெளிப்படுத்துகின்ற செயல்களே (Love in action)
ஆக அன்பை வெளிப்படுத்துகின்ற, அன்பை மையப்படுத்துகின்ற எல்லா செயல்களும் இறைவனின் கட்டளைகளை கடைபிடிப்பதை உணர்த்துகின்றது
இறைவனின் கட்டளைகளை கடைபிடிக்கும் போது நாம் அவர் மீது கொண்டிருக்கும் அன்பு வெளிப்படுத்தப் படுகின்றது...

பென்சி sss
Saturday, May 21, 2011 0 comments

5-ம் உயிர்ப்பு ஞாயிறு

தி. பணி 6:1-7   1பேதுரு 2:4-9    யோவான் 14:1-12
நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு

? எனக்கு மட்டும் அந்த நேரத்தில் ஒரு நல்ல வழி கிடைச்சிருந்தா என் வாழ்க்கை இன்று இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது...
? எது உண்மை, எது பொய், எது சரி, எது தவறு என்று எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை...
?என்ன செய்தால், எப்படி இருந்தால் நிலை வாழ்வு கிடைக்கும் என்று யாராவது சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும்...
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல சந்தர்ப்பங்களில் சொல்லிக் கொள்ளும் வாக்கியங்கள் இவை.
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாகத்தான் இயேசு நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு என்கிறார். ஆக வழியும், உண்மையும், வாழ்வும் தேவையென்றால் அவரையே நாட வேண்டும்.
ஆனால் இன்று எப்படி நமது வாழ்வில் அவரது வழியை, உண்மையை, வாழ்வை பெறுவது?
கேள்வி கடினமாக இருப்பினும் விடை மிக எளிது...
கலங்கி நிற்கும் போது நாம் ஒரே ஒரு கேள்வியை கேட்க வேண்டும்
“எனது இடத்தில் இயேசு  இன்று இருந்தால் என்ன செய்திருப்பார்? என்ன பேசியிருப்பார்? என்ன முடிவுகள் எடுத்திருப்பார்?”
இந்த கேள்விகளைக் கேட்டு, கிடைக்கின்ற விடைகளின் படி வாழ்க்கையை நடத்தினால் அவரது வழியில், அவரது உண்மையை, அவரது வாழ்வைப் பெறலாம்     
பென்சி sss
Saturday, May 7, 2011 0 comments

3-ம் உயிர்ப்பு ஞாயிறு

எம்மாவுஸ் தரும் பாடங்கள்...
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் உயிர்ப்பை பற்றி கூறுகின்ற பகுதிகளில் அதிகமானோருக்கு தெரிந்த, பெரும்பாலானோருக்கு பிடித்தமான அர்த்தம் தருகின்ற ஒரு பகுதியாகும். இப்பகுதி சொல்லுகின்ற / தருகின்ற செய்திகள் மிகவும் ஆழமானவை.
v  உயிர்த்த இயேசு நம்மோடும் உடன் நடந்து வருகின்றார். ஆனால் நமது குழப்பங்களும், கலக்கங்களும் அவரை மறைத்துவிடுகின்றன.
v  மனித அறிவுக்கு / மனங்களுக்கு புரியாத பல விக்ஷயங்களை புரிய வைப்பவர் இயேசு ஒருவரே.
v  நமது கண்கள் திறந்திட நம்முடன் வருகின்றார். ஆனால் நமது அழைப்புக்காக காத்து நிற்கின்றார். காரணம் அவர் நமது சுதந்திரத்தை மதிக்கின்றார்.
v  பகிர்விற்காக உடைக்கப்படும், உடைபடும் ஒவ்வொன்றும் இயேசுவின் பிரசன்னத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
v  இயேசுவை அனுபவித்தவர்கள், அவர் பிரசன்னத்தை உணர்ந்தவர்கள் தங்களுக்குள்ளே வைத்திருக்க மாட்டார்கள்.
உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை நாமும் உணர்ந்திட, பிறருக்கும் உணர்த்திட எம்மாவுஸ் தரும் பாடங்களை நமது வாழ்வாக்குவோம்.
பென்சி sss
Sunday, April 24, 2011 0 comments

Happy Easter

Wishing you all a very happy Easter....

Kindly use the link to listen to the homily

http://www.4shared.com/audio/OjS8ZFx0/Easter.html

Thank you

Benzi sss
Friday, April 22, 2011 0 comments

புனித வெள்ளி

பலியாகிட...

Live-ஆக recordசெய்யப்பட்ட எனது மறையுரை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

http://www.4shared.com/audio/1BfgKFQW/Good_Friday.html



பென்சி sss

Thursday, April 21, 2011 0 comments

புனித வியாழன்


பணி புரிய...

இன்றைய தினம் மூன்று நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
           
        1. குருத்துவம்
                      இறைவனைக் காட்டுகின்ற மனித முகங்களே குருத்துவம்
                    2. நற்கருணை
                    தனது நினைவாக உலகில் விட்டுச்சென்ற இறைவனின் கொடை

                    3. பணிவிடை / தாழ்ச்சி
                     நற்கருணை வாழ்வு
                    இச் சவால்களை வாழ்வாக்கிடவே இன்றைய வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது
                    பென்சி sss
                    Friday, April 15, 2011 0 comments

                    குருத்து / பாடுகளின் ஞாயிறு



                    இன்றைய வழிபாடுகளும், நற்செய்தி நிகழ்வுகளும் நம்மை இயேசுவின் பாடுகள், இறப்பு உயிர்ப்புக்கு தயாரிக்கும் விதமாக அமைகின்றன. அதுமட்டுமின்றி வாழ்வின் தத்துவங்களையும் நமக்கு சொல்லித்தருகின்றது.

                    1.      ஆரவாரத்தோடு வெற்றி மனிதராக இயேசு எருசலேமிற்குள் பவனியாக நுழைந்தாலும், குற்றவாளியாக கல்வாரி நோக்கிய இயேசுவின் சிலுவை பவனியையும் இன்றைய நற்செய்தி நமக்கு காட்டுகின்றது...
                    ·        வாழ்வின் வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும், உயர்வும் தாழ்வும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற வாழ்வின் தத்துவத்தை இது விளக்குகின்றது.

                    2.      'ஓசான்னா’ என்றுஆர்ப்பரித்த அதே மக்கள் தான் ‘சிலுவையில் அறையும்’ என்று கூக்குரலிட்டனரா என்பது நமக்குத் தெரியாது.
                    ·        ஆனால் நமக்கு சாதகமானவர்களும் இருப்பார்கள், பாதகம் விளைவிப்பவர்களும் இருப்பார்கள். முன்னேற்றத்திற்கு துணையாகவும் சிலர் இருப்பர் நட்டாற்றில் விட்டுச்செல்வோரும் இருப்பர். நம்மை ஏற்றுக்கொள்வோரும் இருப்பர் தூற்றுவோரும் இருப்பர் என்பதையும் இன்றைய நற்செய்தி சுட்டிக் காட்டுகின்றது.

                    3.      உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்பாக வருகின்ற இந்த  ‘பாடுகளின்’ ஞாயிறு பாடுகளை, சிலுவைகளை, துன்பங்களை, அவமானங்களை, இழிசொற்களை கடந்து சென்றால் தான் உயிர்ப்பு வாழ்வு கிடைக்கப் பெறும் என்ற ‘No pain no gain’ வாழ்க்கை தத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றது.

                    ஆக புனித வார நிகழ்வுகளுக்கு தயாரிக்க அழைப்பு விடுக்கின்ற இந்த குருத்து / பாடுகளின் ஞாயிறு வழிபாடு தருகின்ற வாழ்க்கை தத்துவங்களை மனதில் நிறுத்துவோம், வாழ்வை எதிர் கொள்வோம்.
                    பென்சி sss
                    Saturday, April 9, 2011 0 comments

                    தவக்காலம் 5-ம் ஞயிறு

                    உயிர் கொடுப்போம்
                    பாஸ்கா விழாவை கொண்டாடுவதற்காக எருசலேம் சென்று கொண்டிருக்கும் போதுதான் வழியில் பெத்தானியாவில் இயேசு, இறந்து போய் நான்கு நாட்கள் ஆகியிருந்த லாசருக்கு உயிர் கொடுக்கின்றார்.
                    எருசலேமில் தனது உயிர் எடுக்கப்படும் என்று தெரிந்திருந்தாலும் சிறிதும் கலக்கமின்றி பிறருக்கு உயிர் கொடுக்கும் இயேசு மீண்டும் ஒரு முறை தனது பிறரண்பை வெளிப்படுத்துகின்றார்.
                    இயேசு லாசருக்கு நாம் நினைக்கின்ற வாழ்வதற்கான வெறும் உயிரை மட்டும் கொடுக்கவில்லை, மாறாக அதையும் கடந்து எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உயிரையும் கொடுக்கின்றார்.
                    இறந்து போன லாசரின் உடல் துணிகளால் சுற்றி கட்டப்பட்டிருந்தது. உண்மையான லாசர் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தார். இயேசுவோ கட்டுகளை அவிழ்த்துவிட கட்டளையிடுகின்றார். வாழ்க்கையில் தான் நல்லவன், அறிவாளி, உயர்ந்தவன் என்று நாம் அணிந்திருக்கின்ற பல முகமூடிகளை  அகற்றி உண்மையான ‘ நான்’ ஐ வெளிக்கொணர்ந்திட வேண்டிய ‘சுய மதிப்பு’ என்ற உயிரை இயேசு தருகின்றார்.
                    லாசரின் கல்லறை மிகப் பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது. இயேசு அக்கல்லை அப்புறப்படுத்த கட்டளையிடுகின்றார். பிறரது ஏச்சுக்கள், பேச்சுக்கள், கேலிகள், நமது தாழ்வு மனப்பான்மை என்ற பல்வேறு கற்கள் நம்மை வளரவிடாது தடுத்துக் கொண்டிருக்கலாம். அவற்றை நகர்த்தி விட்டு வெளிவர இயேசு  ‘தன்னம்பிக்கை’ என்ற உயிரைத் தருகின்றார்.
                    கல்லறையில் இருந்த லாசரை ‘லாசரே வெளியே வா’ என்று இயேசு அழைக்கின்றார். நம்மை நாமே பல்வேறு காரணங்களால் தனிமைப் படுத்திக் கொண்டு பிறரோடும் சமூகத்தோடும் எவ்வித உறவுமின்றி ‘பயம்’ என்ற கல்லறையில் இருக்கின்ற நாம், வெளியே வர இயேசு ‘ துணிவு’ என்ற உயிர் கொடுக்கின்றார்.
                    ஆக இயேசு தருகின்ற உயிர் வாழ்வதற்கானது மட்டுமன்றி எப்படி வாழவேண்டும் என்பதற்கானதுமாகும்.
                    இன்றும் சுயமதிப்பின்றி, தன்னம்பிக்கையின்றி அச்சம் கொண்டு உயிரற்று பல லாசர்கள் நம்மிடையே இருக்கின்றனர்.
                    இவர்களுக்கு சுயமதிப்பு கொடுக்கும் போது
                    தன்னம்பிக்கை கொடுக்கும் போது
                    துணிவு கொடுக்கும் போது
                    நாமும் பிறருக்கு அர்த்தமுள்ள நல்வாழ்வு வாழ உயிர் கொடுக்கிறோம்.
                    இத்தவக்காலம் உயிரளிக்கும் காலமாக அமையட்டும்

                    பென்சி sss
                    Saturday, April 2, 2011 0 comments

                    தவக்காலம் 4-ம் ஞயிறு

                    பார்வை
                    1சாமு 16:1,6-7,10-13   எபே 5:8-14  யோவான் 9:1-41
                    நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் வகுப்பு முடிந்து மாலையில் நுங்கம்பாக்கத்தில் இருந்து வேலப்பன் சாவடிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பேருந்திலோ சென்னை நகரத்திற்கே உரிய கூட்ட நெரிசல். ஓட்டுனரோ பணிக்கு புதியவராய் இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன் காரணம் ஒவ்வொரு முறை பேருந்தை நிறுத்தும் போதும் break-ஐ  sudden break-ஆக apply பண்ணியதால் பயணிகள் ஒவ்வொரு முறையும் நிலை தடுமாறினர். பெண்கள் குறிப்பாக முதியோர் அதிகம் கஷ்டப்பட்டனர். பயணிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டாலும் ஓட்டுனரை யாரும் எதுவும் சொல்லவில்லை.
                    ஆனால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தர மனிதர் ஒருவர் ஒட்டுனரை கவனமாக வண்டியை ஓட்ட சத்தம் போட்டு சொன்னார். ஆனாலும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகள் நிலை தடுமாறுவது தொடர்ந்து கொண்டே இருந்தது. முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவரோ குரலை இன்னும் அதிகமாக உயர்த்தி ஓட்டுனரை திட்டவும் விவாதிக்கவும் ஆரம்பித்தார். பதிலுக்கு ஓட்டுனரும் சத்தம் போட தொடங்கினார்.
                    ஓட்டுனரின் பேரில் தான் தவறு என்று பயணிகள் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஓட்டுனரை எதிர்த்து பேச அந்த ஒரு மனிதரைத் தவிர வேறு யாரும் (நான் உட்பட)  முன் வரவில்லை.
                    நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. கீழே இறங்கியதும் முன்னிருக்கையில் அமர்ந்து ஓட்டுனரின் தவறை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே வந்த அம்மனிதரின் முகத்தைக் காண்பதற்காக பேருந்தின் முன்புறம் வந்தேன்.
                    கீழே இருந்து பார்த்த போது அம்மனிதரின் முகம் கண்ணாடி வழியே தெளிவாக தெரிந்தது. அவரின் முகத்தைப் பார்த்த உடன் மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தேன். தலையை குணிந்தவாறே எனது பயிற்சி இல்லம் வந்து சேர்ந்தேன்.
                    பல நாட்கள் அவரின் முகம் என் நினைவுக்கு அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. இந்நிகழ்வு நடந்து 15ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் அவரது முகம் நினைவில் தெளிவாகவே இருக்கின்றது. காரணம் அவர் ஓர் பார்வையற்றவர்.
                    அவரை பார்வையற்றவர் என்று சொல்ல என்னால் இயலவில்லை. உண்மையில் அன்று பேருந்தில் அவரைத்தவிர மற்ற அனைவரும் தான் பார்வையற்றவர்கள்.
                    இன்றைய நற்செய்தியில் பல மனிதர்கள் வருகின்றார்கள்.  வாசகத்தை வாசிக்கும் போது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கூர்ந்து கவனித்தோம் என்றால் பார்வையற்றவர் யார் பார்வை பெற்றவர் யார் என்ற உண்மை மிகத் தெளிவாக நமக்கு புலப்படும்.
                    • யாருடைய பாவத்தினால் பிறவியிலிருந்தே இவன் குருடனாய் இருக்கின்றான் என்று கேள்விகள் கேட்கின்ற சீடர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:2).
                    • பார்வைபெற்றவனை,  ‘பார்வையற்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவன் இவன்’ என்று இன்னமும் சொல்லிக்கொண்டிருந்த அக்கம் பக்கத்து மனிதர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:8).
                    • மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பரிசேயர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:16).
                    • பிறருக்குப் பயந்து உண்மையைக் கூறாமல் பொறுப்பை தட்டிக் கழித்த பார்வை பெற்ற மனிதனின் பெற்றோர் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:23).
                    • உண்மையை நம்பாமல் திரும்ப திரும்ப உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொல்ல வற்புறுத்திய யூதர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:24).
                    ஆனால்
                    இயேசுவை மனிதர் என்றும் (யோவான் 9:11)  
                    இறைவாக்கினர் என்றும் (யோவான் 9:17)
                    ஆண்டவர் என்றும் (யோவான் 9:38)
                    உணர்ந்து கொண்தோடு மட்டுமன்றி பிறருக்கும் பறைசாற்றிய பார்வையற்ற அம்ம்னிதனே உண்மையில் பார்வை பெற்றவன்.
                    இயேசு தருவது புறப்பார்வையையும் கடந்த அகப்பார்வை.
                    v  மனிதனின் கஷ்டங்களும் நஷ்டங்களும் பாவத்தின் காரணமாய் அல்ல கடவுளின் செயல் இவை வழியாக வெளிப்படவே நடக்கிறது என்ற அகப்பார்வையை இயேசு தருகிறார் (யோவான் 9:3).
                    v  மதிப்பே இல்லாத சேற்றின் உதவியால் மதிப்பற்ற பார்வைகொடுத்து, எதற்குமே உதவாதது, முக்கியத்துவம் அற்றது என்று எதுவுமே இல்லை என்ற அகப்பார்வையை இயேசு தருகிறார் (யோவான் 9:6).
                    v  சட்டங்களை விட மனித நேயமும், மாண்பும் உயர்ந்தது என்ற அகப்பார்வையை இயேசு தருகிறார் (யோவான் 9:14).
                    இறைவா
                    இத்தவக்காலத்தில்
                    என் கண்களைத் திறந்தருளும்.
                    அகப்பார்வையை தந்தருளும்.
                    நீரே ஆண்டவர் என பறை சாற்ற வரம் தாரும்.
                    மனித நேயத்தையும், மாண்பையும் காக்க உறுதி தாரும்.
                    உயர்வும் தாழ்வும் உம்மை வெளிப்படுத்தும் அனுபவங்களே என்பதை உணரச்செய்யும்.     
                    ஆமென்.

                    பென்சி sss
                    Saturday, March 26, 2011 0 comments

                    தவக்காலம் 3-ம் ஞயிறு

                    தரணி எங்கும் தாகம்
                    தணியாத தாகம்...
                    விப17:3-7     உரோ 5:1-8      யோவான் 4:5-42

                    இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் தாகம் கொண்டனர்
                    தாகமாயிருக்கிறோம் என்று மோயிசனிடம் முறையிடுகின்றனர்
                    வெறும் தண்ணீருக்கான தாகம் அல்ல அது
                    விடுதலைக்கான தாகம்...
                    விடியலுக்கான தாகம்...
                    புது தேசத்திற்கான தாகம்...
                    புது வாழ்விற்கான தாகம்...
                    யாவே கடவுள் மோயீசன் வழியாக அவர்களின் தாகத்தை தணிக்கிறார்

                    சமாரியாவில் இயேசு பெண்ணொருத்தியிடம்
                    தாகமாயிருக்கிறேன் என்று முறையிடுகின்றார்
                    தண்ணீர் எடுக்க வந்த சமாரியப் பெண்ணும்
                    தாகமாகவே இருக்கின்றார்

                    இருவரும் தாகமாக இருந்தாலும்
                    இருவரின் தாகமும் வெவ்வேறானது

                    எந்த மலையில் வழிபட வேண்டும்
                    என்று கேட்கின்ற சமாரியப்பெண்ணின் தாகம்
                    உலக நீதிகளை, நியதிகளை
                    மனித மதிப்பீடுகளை
                    முரன்பாடுகளின் தெளிவுகளை, உண்மைகளை
                    அறிந்து கொள்ள முனைகிற தாகம்

                    இயேசுவின் தாகம்
                    தன்னை வெளிப்படுத்த துடிக்கிற
                    தரணி மீட்பு பெற உழைக்கிற
                    தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டிய தாகம்...

                    ஆகவேதான் உரையாடலின் துவக்கத்தில்
                    இயேசுவை யூதர் (யோவான் 4:9)என்று அழைக்கின்ற சமாரியப் பெண்
                    ஐயா என்றும் (15)
                    இறைவாக்கினர் என்றும்(19)
                    கிறிஸ்து என்றும்(25)
                    மெசியா என்றும்(29)
                    மீட்பர் என்றும்(42) இறுதியில் உணர்ந்து கொள்கிறார்.

                    நாமும், நம்மைச் சூழ்ந்து இருப்பவர்களும்
                    மொத்தத்தில் உலகமே – இன்று
                    தாகமாயிருக்கிறது....
                    பணத்திற்காக, பதவிக்காக
                    புகழுக்காக, பொருளுக்காக
                    உறவுக்காக, உண்மைக்காக
                    நிம்மதிக்காக, நிறைவுக்காக
                    மாண்புக்காக, மன்னிப்புக்காக
                    என்று அடுக்கிக்கொண்டே போகலாம்

                    இத்தாகங்களைத் தணிக்க நாம்
                    இறைவனின் வாழ்வு தரும் தண்ணீரைத் தேடுகின்றோமா? அல்லது
                    வெறும் தண்ணீர் தாகத்தை மட்டும் தீர்த்துக்கொள்கிறோமா?

                    இன்று
                    இறைவார்த்தை வாழ்வு தரும் தண்ணீர்
                    உண்மையான வழிபாடு வாழ்வு தரும் தண்ணீர்
                    ஆத்மார்த்தமான ஜெபம் வாழ்வு தரும் தண்ணீர்
                    தியாக அன்பு வாழ்வு தரும் தண்ணீர்...
                    1. எனது தாகம் எது?
                    2. எனது தாகத்தை தணிக்க எதை தேடுகின்றேன்?
                    கீழ் காணும் பாடல் நமது தாகமாக இருக்கட்டும்.....

                    தாகமாய் இருக்கின்றேன் -2
                    உறவில் இணைந்து உயிரில் கலந்து
                    உனதாய் வாழவே – நான்
                    தாகமாய் இருக்கின்றேன்

                    அன்பின் சமூகம் மண்ணில் மலர தாகம் தாகமே
                    உயிர்ப்பில் வாழ தாகமே
                    வாழும் வாழ்வை நிறைவாய் வாழ தாகம் தாகமே
                    உன்னில் வாழ தாகமே
                    உன்னைப்போல ஒளியாய்  வாழ-2
                    உனக்காய் என்னை முழுதாய் தரவே
                    தாகம் தாகமே – நான்

                    வறுமை இங்கு மறைந்து போக தாகம் தாகமே
                    வளமாய் வாழ தாகமே
                    பாரில் மனிதர் சமமாய் வாழ தாகம் தாகமே
                    பகிர்வில் வாழ தாகமே
                    ஒன்றி வாழ்ந்து உறவில் வளர்ந்து-2
                    உனது வழியில் மனிதம் காக்க
                    தாகம் தாகமே – நான்
                                2003-ம் ஆண்டு நான் எழுதிய இப்பாடலுக்கு இசை வடிவம் கொடுத்த அருட்தந்தை. பீட்டர் பெர்னாண்டஸ்sss அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்
                    பென்சி sss
                     
                    ;