தி. பணி 6:1-7 1பேதுரு 2:4-9 யோவான் 14:1-12
நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு
? எனக்கு மட்டும் அந்த நேரத்தில் ஒரு நல்ல வழி கிடைச்சிருந்தா என் வாழ்க்கை இன்று இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது...
? எது உண்மை, எது பொய், எது சரி, எது தவறு என்று எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை...
?என்ன செய்தால், எப்படி இருந்தால் நிலை வாழ்வு கிடைக்கும் என்று யாராவது சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும்...
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல சந்தர்ப்பங்களில் சொல்லிக் கொள்ளும் வாக்கியங்கள் இவை.
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாகத்தான் இயேசு நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு என்கிறார். ஆக வழியும், உண்மையும், வாழ்வும் தேவையென்றால் அவரையே நாட வேண்டும்.
ஆனால் இன்று எப்படி நமது வாழ்வில் அவரது வழியை, உண்மையை, வாழ்வை பெறுவது?
கேள்வி கடினமாக இருப்பினும் விடை மிக எளிது...
கலங்கி நிற்கும் போது நாம் ஒரே ஒரு கேள்வியை கேட்க வேண்டும்
“எனது இடத்தில் இயேசு இன்று இருந்தால் என்ன செய்திருப்பார்? என்ன பேசியிருப்பார்? என்ன முடிவுகள் எடுத்திருப்பார்?”
இந்த கேள்விகளைக் கேட்டு, கிடைக்கின்ற விடைகளின் படி வாழ்க்கையை நடத்தினால் அவரது வழியில், அவரது உண்மையை, அவரது வாழ்வைப் பெறலாம்
பென்சி sss

No comments:
Post a Comment