இன்றைய வழிபாடுகளும், நற்செய்தி நிகழ்வுகளும் நம்மை இயேசுவின் பாடுகள், இறப்பு உயிர்ப்புக்கு தயாரிக்கும் விதமாக அமைகின்றன. அதுமட்டுமின்றி வாழ்வின் தத்துவங்களையும் நமக்கு சொல்லித்தருகின்றது.
1. ஆரவாரத்தோடு வெற்றி மனிதராக இயேசு எருசலேமிற்குள் பவனியாக நுழைந்தாலும், குற்றவாளியாக கல்வாரி நோக்கிய இயேசுவின் சிலுவை பவனியையும் இன்றைய நற்செய்தி நமக்கு காட்டுகின்றது...
· வாழ்வின் வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும், உயர்வும் தாழ்வும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற வாழ்வின் தத்துவத்தை இது விளக்குகின்றது.
2. 'ஓசான்னா’ என்றுஆர்ப்பரித்த அதே மக்கள் தான் ‘சிலுவையில் அறையும்’ என்று கூக்குரலிட்டனரா என்பது நமக்குத் தெரியாது.
· ஆனால் நமக்கு சாதகமானவர்களும் இருப்பார்கள், பாதகம் விளைவிப்பவர்களும் இருப்பார்கள். முன்னேற்றத்திற்கு துணையாகவும் சிலர் இருப்பர் நட்டாற்றில் விட்டுச்செல்வோரும் இருப்பர். நம்மை ஏற்றுக்கொள்வோரும் இருப்பர் தூற்றுவோரும் இருப்பர் என்பதையும் இன்றைய நற்செய்தி சுட்டிக் காட்டுகின்றது.
3. உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்பாக வருகின்ற இந்த ‘பாடுகளின்’ ஞாயிறு பாடுகளை, சிலுவைகளை, துன்பங்களை, அவமானங்களை, இழிசொற்களை கடந்து சென்றால் தான் உயிர்ப்பு வாழ்வு கிடைக்கப் பெறும் என்ற ‘No pain no gain’ வாழ்க்கை தத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றது.
ஆக புனித வார நிகழ்வுகளுக்கு தயாரிக்க அழைப்பு விடுக்கின்ற இந்த குருத்து / பாடுகளின் ஞாயிறு வழிபாடு தருகின்ற வாழ்க்கை தத்துவங்களை மனதில் நிறுத்துவோம், வாழ்வை எதிர் கொள்வோம்.
பென்சி sss

No comments:
Post a Comment