Saturday, May 7, 2011

3-ம் உயிர்ப்பு ஞாயிறு

எம்மாவுஸ் தரும் பாடங்கள்...
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் உயிர்ப்பை பற்றி கூறுகின்ற பகுதிகளில் அதிகமானோருக்கு தெரிந்த, பெரும்பாலானோருக்கு பிடித்தமான அர்த்தம் தருகின்ற ஒரு பகுதியாகும். இப்பகுதி சொல்லுகின்ற / தருகின்ற செய்திகள் மிகவும் ஆழமானவை.
v  உயிர்த்த இயேசு நம்மோடும் உடன் நடந்து வருகின்றார். ஆனால் நமது குழப்பங்களும், கலக்கங்களும் அவரை மறைத்துவிடுகின்றன.
v  மனித அறிவுக்கு / மனங்களுக்கு புரியாத பல விக்ஷயங்களை புரிய வைப்பவர் இயேசு ஒருவரே.
v  நமது கண்கள் திறந்திட நம்முடன் வருகின்றார். ஆனால் நமது அழைப்புக்காக காத்து நிற்கின்றார். காரணம் அவர் நமது சுதந்திரத்தை மதிக்கின்றார்.
v  பகிர்விற்காக உடைக்கப்படும், உடைபடும் ஒவ்வொன்றும் இயேசுவின் பிரசன்னத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
v  இயேசுவை அனுபவித்தவர்கள், அவர் பிரசன்னத்தை உணர்ந்தவர்கள் தங்களுக்குள்ளே வைத்திருக்க மாட்டார்கள்.
உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை நாமும் உணர்ந்திட, பிறருக்கும் உணர்த்திட எம்மாவுஸ் தரும் பாடங்களை நமது வாழ்வாக்குவோம்.
பென்சி sss

No comments:

Post a Comment

 
;