இயேசு உயிர்த்த 50 –வது நாளில் தூய ஆவியானவர் தீ நாக்கு வடிவில் அப்போஸ்தலர்கள் மேல் இறங்கி வந்ததை நினைவு கூறுகின்ற இந்த நாளினை பெந்தகொஸ்தே திருவிழாவாக திருச்சபை கொண்டாடுகின்றது.
இன்றைய தினம் தூய ஆவியைப் பற்றி சிந்திப்பதே சிறந்ததாகும்.
தூய ஆவியானவரைப் பற்றி பல்வேறு வகையான புரிதல்கள் உள்ளன. அவற்றில் பல தவறானவைகள். பலர் தூய ஆவியானவர் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகின்றனர்.
- தூய ஆவியானவர் ஓர் துணையாளர்: எப்போதும் நம்மோடு உடன் இருந்து உடன் நடக்கும் தூய ஆவியானவர் இயேசுவின் வாக்குறுதிக்கு ஏற்ப துணையாளராக இருக்கிறார்.
- தூய ஆவியானவர் ஓர் உதவியாளர்: துணையாக வருபவர் எப்போதும் நமக்கு உதவி செய்பவராகவும் இருக்கின்றார்.
- தூய ஆவியானவர் ஓர் அறிவிப்பாளர்: நாம் தவறும் போதும், தடுமாறும் போதும், வழிமாறும் போதும் நம் மனசாட்சியாக சரி எது தவறு எது என்று நமக்கு அறிவிப்பவர்.
- தூய ஆவியானவர் ஓர் பயிற்சியாளர்: எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் பயிற்சியாளர் தேவை. நம்மை பக்குவப் படுத்துகின்ற, பண் படுத்துகின்ற பயிற்சியாளராக தூய ஆவியானவர் இருக்கின்றார்.
இந்த பெந்தகொஸ்தே பெருவிழாவிழாலே இவர் நம்மையும் ஆட்கொள்ள, அபிஷேகம் செய்ய வேண்டிடுவோம்.
பென்சி sss


1 comment:
good, but not to the expectation. be practical and simple. don't be too spiritual.
Post a Comment