Friday, January 28, 2011 0 comments

நிறைவான வாழ்விற்கு...

செப்2:3, 3:12-13        கொரி 1:26-31;           மத் 5:1-12
மனிதர்கள் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ கொண்டிருக்கின்ற குறிக்கோள்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
  1. வெற்றி பெறுவதைச் சார்ந்து இருக்கும்.
வாழ்க்கையில் அதிகமாக பணம் / பொருள் சேர்க்க வேண்டும், புகழ் பெற வேண்டும், பதக்கங்கள் பெறவேண்டும், பதவிகள் அடைய வேண்டும் என்பதே இவர்களின்  நோக்கமாக இருக்கும். இதற்காக இவர்கள் சந்திக்கின்ற போராட்டங்களும் போட்டிகளும் இவர்களது வாழ்வின் நிம்மதியை இழக்க வைக்கிறது.
  1. மகிழ்ச்சியாக இருப்பதைச்சார்ந்து இருக்கும்.
சிலர் வாழ்க்கையில் போதும் என்ற மனதோடு இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோசமாக வாழ முயற்சி செய்வர். சண்டைகளிலோ, போட்டிகளிலோ, குழப்பங்களிலோ ஈடுபட மாட்டார்கள். ஆனால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையே என்ற ஏக்கமும், முன்னேறியவர்களைக் கண்டு பொறாமையும் இவர்களிடம் இருக்கும்
  1. நிறைவாக இருப்பதைச்சார்ந்து இருக்கும்.
பிறரோடு போட்டியோ, ஒப்பீடோ செய்யாமல் தங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு உழைப்பவர்கள் இவர்கள். உலகத்தின் பார்வையில் தங்களின் மதிப்பு உயரவேண்டும் என்று எண்ணாமல் மனசாட்சியின் படி வாழ்பவர்கள் இவர்கள். தங்களுக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும்  இவர்கள் வாழ்பவர்கள். இவர்களின் வாழ்க்கையில் அர்த்தமும், நிறைவும் இருக்கும்.
கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிறருக்கும் அதிகமாக தெரிந்த ஒரு விவிலிய பகுதியை நாம் இன்று வாசிக்கக் கேட்டோம். மலைப்பொழிவு என்று பரவலாக குறிப்பிடப்படும் இப்பகுதி (கிறிஸ்தவ) வாழ்க்கையின் குறிக்கோளை சுட்டிக் காட்டுகின்றது.
எதை நாம் செய்யக்கூடாது என்று அறிவுரை சொல்ல இன்று பலர் இருக்கின்றனர். ஆனால் எதைச் செய்ய வேண்டும் என்று சொல்ல யாரும் முன் வருவதில்லை.
இன்றைய நற்செய்தி நாம் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்துவதோடு வெற்றியையும், மகிழ்ச்சியையும் தாண்டி நாம் நிறைவான வாழ்வை வாழ்வதற்கான வழியை காட்டுகின்றது
இப்பகுதியை புரிந்து கொள்ள அகராதிகளோ, இறையியல் புத்தகங்களோ தேவையில்லை ஆழமாக, கவனமாக வாசித்தாலே போதுமானது. ஆனால் இவ்வார்த்தைகள் சாதாரணமாக சொல்லப்படவில்லை.
மத் 5:1-ல்  ‘அமர்ந்து’ இயேசு இவற்றை கற்பிக்கின்றார்.  மிக முக்கியமானவற்றை குருஜிகளும், அரசர்களும் இன்று ஆயர்களும், திருத்தந்தையும் தங்களது சிம்மாசனத்தில் அமர்ந்து சொல்லுவது தான் வழக்கம். இயேசுவும் அமர்ந்து மிக முக்கியமான இவ்வார்த்தைகளைச் சொல்லுகின்றார்.
மத் 5:2-ல்   ‘திருவாய் மலர்ந்து’ என்பதைக் குறிப்பிடும் கிரேக்க மொழி வார்த்தையானது அபூர்வமான மற்றும் இதயத்திலிருந்து வருகின்ற வார்த்தையைக் குறிக்கும்.
ஆக மிக முக்கியமான இவ்வார்த்தைகள் சாதாரணமான வார்த்தைகள் அல்ல மாறாக ஆழமான வார்த்தைகள்.  உலக மதிப்பீடுகளின் படி பயணற்றதும், அர்த்தமற்றதும் ஆகும்.
ஆனால் வாழ்க்கையில்
நிறைவு இருக்க வேண்டும் என்றால்...
நிம்மதி இருக்க வேண்டும் என்றால்...
அர்த்தம் இருக்க வேண்டும் என்றால்...
இவ்வார்த்தைகளை வாழ்வாக்குவோம்.
பென்சி sss
28.01.11
Friday, January 21, 2011 0 comments

கேள்விகள்...

எசா8:23-9:3 1கொரி1:10-13,17 மத் 4:12-23
இன்றைய முதல் வாசகம் நாடு கடத்தப்பட்டு, துன்பத்திலும் துயரத்திலும் வாடிக்கொண்டிருந்த இஸ்ராயேல் மக்களுக்கு, இருளில் நடப்போர் ஒளியை காண்பர் என்ற நற்செய்தியை இறைவாக்கினர் எசாயா அளிக்கிறார்.
நற்செய்தி வாசகம் நமக்கு இயேசுவின் பணி வாழ்வின் துவக்கத்தைப் பற்றி கூறுகின்றது. கலிலேயாவில் இயேசு தன் பணியை துவங்குவதற்கு பல காரணங்களை விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
  1. சிறிய கடற்கரை நகரம் ஆனால் அதிக மக்கள் வாழ்ந்த பகுதி
  2. கலிலேயா ஒரு கலகக்கார நகரமாக அறியப்பட்டிருந்த்தது
  3. மக்களின் வாழ்வு முறை பாவ வழியில் இருந்த்தது
  4. அங்கு வாழ்ந்த்த யூதர்கள் கூட மதத்தின் சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
·         ஆக இயேசு தன் பணி வாழ்வை சவால் நிறைந்த பகுதியில் துவங்குகின்றார்.
·         தான் மட்டும் பணியை தொடரவில்லை, மாறாக இணைந்து பணியாற்றவும், தனக்குப் பின் தன் பணியை தொடரவும் சீடர்களை அழைக்கின்றார்.
·         அழைக்கப்பட்ட சீடர்களும் உடனே அழைப்புக்கு செவிசாய்க்கின்றார்கள். மனிதனின் தனி வாழ்விலும், சமூக வாழ்விலும் வாழ்வாதாரமும், உறவாதாரமும் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் இன்றைய நற்செய்தியில் பேதுருவும், அந்திரேயாவும், யாக்கோபும், யோவானும் உடனே (இவ்வார்த்தை இருமுறையும் 20,22 வருகின்றது) தங்களின் படகையும், உறவையும் (வாழ்வாதாரத்தையும், உறவாதாரத்தையும்) விட்டு விட்டு இயேசுவை பின்பற்றினர்.
நம் வாழ்வுக்கு...
நமது பணி வாழ்வுக்கு சவாலான சூழலை விரும்புகிறோமா அல்லது சாதாரண் சூழலை விரும்புகிறோமா?
■இணைந்து பணியாற்ற விரும்புகிறோமா? அல்லது தனித்து பணியாற்ற விரும்புகிறோமா?  
■ யாரை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றோம்? இயேசுவையா? உலகையா?
பென்சி sss
21.01.11

0 comments

பொங்கட்டும் புது வாழ்வு...

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பல்வேறு காரணங்களினால் பொங்கல் மறையுறையை பதிவேற்றம் செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன்
பென்சி sss
14.01.11
Saturday, January 8, 2011 0 comments

இயேசுவின் திருமுழுக்கு விழா


எசா 42:1-4,6-7, திப 10:34-38, மத் 3:13-17
இன்றைய இயேசுவின் திருமுழுக்கு திருவிழாவுடன் கிறிஸ்துபிறப்பு காலம் முடிவுக்கு வருகின்றது. ஆனால் இனி வரக்கூடிய திருவழிபாட்டுக் காலம் முழுவதும் நாம் எப்படிப் பட்ட கிறிஸ்தவர்களாக வாழவேண்டும் என்பதை இத்திருவிழா நமக்குச் சொல்லித் தருகின்றது.
ஒரே கடவுளின் மூன்று ஆட்களும் பிரசன்னமாகி இருக்கிற மிக முக்கியமான விவிலியபகுதியை தியாணிக்க அழைக்கிறது இன்றைய திருவிழா.
இயேசு யார் என்ற இயேசுவின் அடையாளத்தையும், இயேசுவின் வாழ்வு எப்படி இருக்கும் என்ற இயேசுவின் பணியையும் இவ்விழா தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக இத்திருவிழா நமது திருமுழுக்கு வாழ்வினை, கிறிஸ்தவ வாழ்வினை திரும்பிப் பார்க்க, அலசிப்பார்க்க அழைக்கின்றது. நமது வாழ்வினைக் கண்டு இறைவன், ‘இவரே என் அன்பார்ந்த மகன்/மகள், இவரில் நான் பூரிப்பு அடைகிறேன்என்று சொல்லுவாரா?
இன்று வாழுகின்ற வாழ்வை வைத்து கிறிஸ்தவர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
  1. வார்த்தை கிறிஸ்தவர்கள்: நம்மில் பலர் கிறிஸ்தவத்தைப் பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியும் அதிகமாக பேசுவதில் வல்லவர்கள். திருச்சபையின் எல்லாவிதமான போதனைகளையும், கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் தெரிந்து கொள்ளுவதிலும், பேசுவதிலும், எழுதுவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டுபவர்கள்
  2. வாடிக்கை கிறிஸ்தவர்கள்: கிறிஸ்தவர்களாக பிறந்து விட்டோம் என்பதற்காக, எந்த ஒரு பிடிப்பும் இன்றி  சமூதாயத்திற்காகவும், அந்தஸ்துக்காகவும் கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள். கிறிஸ்தவ மதிப்பீடுகள் பற்றியோ, சாட்சிய வாழ்வு பற்றியோ கவலைப்பட மாட்டார்கள். கிறிஸ்துவத்தின் சட்ட திட்டங்களுக்கும், பங்கின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுபட்டு நடப்பர்.
  3. வழிபாட்டு கிறிஸ்தவர்கள்: ஆலயத்தில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளிலும் தவறாது இவர்கள் பங்கு பெறுவர். பங்கின் செயல்பாடுகளிலும், வழிபாடுபாடுகளிலும் அதிகமான ஈடுபாடு காட்டுவார்கள். ஆனால் பெரும்பாலும் அவைகளில் தனிப்பட்ட தேவைகளும், சுயநலமும் கலந்திருக்கும்.
  4. வாழ்க்கை கிறிஸ்தவர்கள்: தங்களின் வாழ்வு கிறிஸ்துவை பிரதிபலிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுபவர்கள். பேச்சும் செயல்பாடுகளும் இயேசுவுக்கு சாட்சியமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை எடுப்பவர்கள். மொத்தத்தில் இயேசுவை வெறும் வார்த்தைகளிலோ அடையாளச் சின்னங்களிலோ மட்டுமே வெளிப்படுத்த நினைக்காமல் வாழ்க்கையில் வெளிப்படுத்த நினைப்பவர்கள்.
இந்த நான்கு வகையான வாழ்வு முறைகளில் திருமுழ்நாம் எந்த வகையான கிறிஸ்தவ வாழ்வு வாழ்கிறோம்?
இன்றைய முதல் வாசகம்  நீதி நெறிக்காக வாழ்பவருக்கு இறைவனின் ஆதரவும், அவருக்காக பூரிப்பும் அடைவதாக கூறுகிறது. அப்படி எனில் திருமுழுக்கு பெற்றவரின் வாழ்வும் நீதியை வாழுகின்ற, தேடுகின்ற, கொணர்கின்ற வாழ்வாக அமைந்திட வேண்டும்.
பென்சி sss
08.01.11
Sunday, January 2, 2011 0 comments

திருக்காட்சி திருவிழா

எசா 60:1-6, எபே 3: 2-6, மத் 2:1-12
இயேசு தன்னை வெளிப்படுத்தியதை நினைவு கூறும் விழாவே இந்த திருக்காட்சி திருவிழா. சிறப்பாக ஞானிகளுக்கு வெளிப்படுத்தியதையே இன்றைய தினம் திருச்சபை நம்மை தியாணிக்க அழைக்கிறது.
ஞானிகளின் மூன்று அன்பளிப்புகளை வைத்து பாரம்பரியம் மூன்று ஞானிகள் இயேசுவை சந்திக்க வந்தனர் என்று சொன்னாலும் நற்செய்தி ஞானிகளின் எண்ணிக்கையை சொல்லவில்லை.
பாரம்பரியம் இந்த மூன்று ஞானிகளுக்கும் மெல்கியாஸ், கஸ்பார், பல்தசார் என்று பெயர்கள் கூட சூட்டியுள்ளது. இது தவிர தற்போது நான்காவதாக மனதை உருக வைக்ககூடிய இக்காலத்திற்கு தேவையான அர்த்தபன் என்ற ஞானியின் கதையை ஹென்றி வேன் டைக் என்பவர் எழுதியுள்ளார்.
அந்த கதையை படிக்கவோ அல்லது வீடியோவாக பார்க்கவோ வேண்டுமெண்றால் கீழெ உள்ள லிங்கை பயன்படுத்தவும்

சில சிந்தனைகள்
  1. ஞானிகள் ஓரெ ஒரு நட்சத்திரத்தை மட்டும் நம்பி கடினமான பயணத்தை மேற்கொண்டு இயேசுவை சந்தித்தனர். நமது வாழ்வும் ஒரு பயணம். திருச்சபை, இறைவார்த்தை, வழிபாடுகள் என்று பல நட்சத்திரங்கள் நமக்கு இன்று வழிகாட்டுகின்றன. ஆனால் நமது பயணம் இயேசுவை நோக்கிய பயணமாக உள்ளதா?
  2. ஞானிகள் கொண்டு வந்த ஒவ்வொரு அன்பளிப்பும் இயெசுவைப் பற்றிய அவர்களது புரிதலை வெளிப்படுத்துகின்றது. (பொன் இயேசுவின் அரசத்தன்மையையும், வெள்ளைப்போளம் மனிதத் தன்மையையும், தூபம் கடவுள் தன்மையையும் குறிக்கின்றது) இன்று நாம் இயேசுவுக்கு ஒரு அன்பளிப்பு கொடுக்கவேண்டுமென்றால் எதை அன்பளிப்பாக கொடுப்பேன், அது இயேசுவைப் பற்றியெ எத்தகைய புரிதலை வெளிப்படுத்தும்?
  3. இயேசுவை ச்ந்தித்த ஞானிகள் திரும்பிச் செல்லும் போது வேறு வழியில், புதிய வழியில் சென்றனர். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை கொண்டாடிய நமது வாழ்வு இப்புதிய ஆண்டில் புது வழியில் செல்கிறதா? அல்லது பழைய வழியிலேயே வாழ்கிறோமா?
வெளிப்படுத்திய இறைவனை பிறருக்கும் வெளிப்படுத்த இவ்விழா அழைக்கிறது.
பென்சி sss
02.01.11

 
;