Saturday, March 12, 2011

தவக்காலம் 1-ம் ஞயிறு

தொ நூல் 2:7-9; 3:1-7           உரோ 5:12-19         மத் 4:1-11
சோதனைகளை வென்றிடுவோம்
இயேசுவின் சோதனைகளை பற்றி சிந்திப்பதைவிட  அவர் எவ்வாறு சோதனைகளை வென்றார் என்று சிந்திப்பது தான் பொருத்தமானது.
இயேசுவுக்கும் சாத்தானுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் எப்படி நற்செய்தியாளர்களுக்கு தெரிய வந்தது என்ற ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது...
புத்திசாலித்தனமான கேள்வி ஆனால் பொருத்தமான கேள்வியா?
சோதனைகள் வாழ்க்கையில் சகஜம். சோதனைகளே இல்லாத வாழ்க்கையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் வாழ்க்கையில் வருகின்ற சோதனைகளை வென்றிட முடியும்.
சோதனைகளை வெல்லுவது எப்படி
  1. எனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்ற புரிதல் வேண்டும்
  2. அந்த வாழ்க்கையை அடைய / பெற எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.
  3. எத்தகைய சூழலிலும் தேர்ந்து கொண்ட இவ்வாழ்க்கை முறையிலிருந்து தவற மாட்டேன் என்ற உறுதி வேண்டும்
இம்மூன்று குணங்களும் நம்மிடம் இருக்குமெனில் இயேசுவைப்போல் நம்மாலும் எத்தகைய சோதனைகளையும் கடந்து வர முடியும். காரணம்..
இவைகள் இருந்தது என்றால் மனது அலைபாயாது
தேவையற்ற சோதனைகளும் வராது
சோதனைகள் வந்தாலும் கடந்து செல்ல நம்மால் முடியும்
சிந்திக்க
·         அதிகமாக நான் சந்திக்கின்ற சோதனைகள் எவை?
·         அதற்கான காரணங்கள் என்ன?
·         இச்சோதனைகளை வெல்ல நான் எடுத்த முயற்சிகள் என்ன?
·         இவைகளால் நான் கற்ற பாடங்கள் என்ன?
·         இச்சோதனைகளில் இருந்து முழுமையாக வெளியேற இத்தவக்காலத்தில் என்ன முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறேன்?
பென்சி sss

No comments:

Post a Comment

 
;