Friday, March 18, 2011

தவக்காலம் 2-ம் ஞயிறு

மாற்றங்கள்
தொ. நூல் 12: 1-4                   2திமோ 1:8-10     மத் 17:1-9
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாத ஒன்று – ஆனால்
மனிதர்கள் மாற்றத்தை விரும்புவதில்லை
மனித மனங்கள் மாற்றத்தை ஏற்பதில்லை

இன்றைய முதல் வாசகம் இடமாற்றத்தைப் பற்றி கூறுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகம் உருமாற்றத்தைப் பற்றி கூறுகின்றது.
இரண்டாவது வாசகமோ மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

வயதானவர்களைக் கேட்டுப்பாருங்கள்
இடம்மாறுவது எவ்வளவு கடினம் என்று கூறுவார்கள்.
உடல் எடையை குறைக்க முயல்பவர்களைக் கேட்டுப்பாருங்கள்
உருவமாற்றம் எவ்வளவு கடினம் என்று கூறுவார்கள்.

இயேசுவின் உருமாற்றம் உருவமாற்றம் அல்ல
Transfiguration is not a change of figure or change in figure
 but transcending the figure

ஆபிரகாமும் இயேசுவும் மாற்றத்திற்கு தங்களை உட்படுத்த முடிந்தது
காரணம்
அவர்களின் திறந்த மனது.

மனிதர்களும் எதிர்காலமும் இப்படித்தான் இருக்க வேண்டும் – என்ற
எதிர்பார்ப்பு அவர்களிடம் இருக்கவில்லை.
மாறாக
மனிதர்களும் எதிர்காலமும் எப்படி இருந்தாலும்
எதிர்கொள்ளும் / ஏற்றுக்கொள்ளும்
திறந்த மனது அவர்களிடம் இருந்தது.

உலகம் மாறும்
உறவுகள் மாறும்
உணர்வுகள் மாறும்
மதிப்பீடுகள் மாறும்
மாண்புகள் மாறும்
மனிதர்கள் மாறுவார்கள்
இம்மாற்றங்களை எதிர்கொள்ள, ஏற்றுக்கொள்ள
மனமாற்றம் தேவை

சில மாற்றங்களை தவிர்க்க முடியாது
கால மாற்றங்களை
பருவ மாற்றங்களை
முதிர்ச்சியின் மாற்றங்களை
முதுமையின் மாற்றங்களை
முன்னேற்றத்தின் மாற்றங்களை தவிர்க்க முடியாது

வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு மாற்றங்கள் மாறுதல்கள் அவசியம்
அவசியமான இம்மாற்றத்திற்கு நான் தயாரா...?

எத்தகைய மாற்றங்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன்?
எத்தகைய மாற்றங்களை நான் விரும்புகிறேன்?
தவக்காலத்தில்
  1. எத்தகைய மாற்றத்திற்கு என்னை உட்படுத்தப் போகிறேன்?
  2. எத்தகைய மாற்றத்தை உலகில் கொணரப் போகிறேன்?
ஆபிரகாமின் இடமாற்றமும், இயேசுவின் உருமாற்றமும்
இத்தவக்காலத்தில்
நமது மனமாற்றத்திற்கு வழிகாட்டட்டும்.
பென்சி sss

No comments:

Post a Comment

 
;