Tuesday, March 8, 2011

விபூதிப்புதன்

தவக்காலத்தை நம்மில் சிலர்
·         சேமிப்புக்காலமாக,
·         தம்பட்டக்காலமாக
·         நடிப்புக்காலமாக
·         உடல் எடையை குறைக்கும் காலமாக
·         நேரத்தை மிச்சப்படுத்தும் காலமாக பார்க்கின்றோம்.
ஆனால் நம்மில் எத்தனை பேர் தவக்காலத்தை ஒரு
Ø  தவத்தின் காலமாக,
Ø  தயாரிப்புக்காலமாக
Ø  உறவின் காலமாக பார்க்கின்றோம்.
தவத்தின் காலம்
தவக்காலம் என்ற உடன் ‘பரிகாரம்’  ‘ஒறுத்தல்’ ‘வேதனை’ இவைகள் தாம் நமது மனதிற்கு வருகின்றது. It is not a season of / for penance. தவக்கால திருப்பலியின் முதல் தொடக்கவுரை தவக்காலத்தை மகிழ்ச்சியின் காலமாக சித்தரிக்கின்றது. தவம் என்பது ஐம்பலன்களின் அடக்கம். இக்காலத்தில் நம் ஐம்புலன்களையும் நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து நெறிப்படுத்த வேண்டிய காலம்.
தயாரிப்புக்காலம்
தொடக்கத்தில் உயிர்ப்புப் பெருவிழாவிற்கான தயாரிப்புக்காக ஒரு நாள்  நோன்பு மட்டும் தான் இருந்தது. ஆனால் பின்னர் அதுவே படிப்படியாக  இரண்டு நாட்கள், ஏழு நாட்களென்று இறுதியாக நாற்பது நாட்களாக மாறியுள்ளது.இயேசு பாலைவனத்தில் கழித்த நாற்பது நாட்கள் இதற்கு ஆதாரமாக நிற்கின்றது.
இந்த நாற்பது நாட்களும் திருச்சபையின் முதன்மையான விழாவான உயிர்ப்பு விழாவிற்கு தயாரிக்கின்ற காலமாக திருச்சபை தந்துள்ளது.
உறவின் காலம்
தவக்காலம் அர்த்தமுடன் இருந்திட திருச்சபை நம்மை நோன்பு இருக்கவும், தானம் செய்யவும், ஜெபிக்கவும் அழைக்கின்றது. இவை மூன்றுமே உறவினை வலுப்படுத்துகின்றது.
நோன்பு          - என்னொடு உள்ள உறவினை வளர்க்கின்றது
தானம்            - பிறரோடு உள்ள உறவினை வளர்க்கின்றது
ஜெபம்            - கடவுளோடு உள்ள உறவினை வளர்க்கின்றது
ஆக இந்த தவக்காலத்தை
                                    தவத்தின் காலமாக
                                    தயாரிப்பின் காலமாக
                                    உறவின் காலமாக   மாற்றுவோம்.
பென்சி sss

No comments:

Post a Comment

 
;