எசா 60:1-6, எபே 3: 2-6, மத் 2:1-12
இயேசு தன்னை வெளிப்படுத்தியதை நினைவு கூறும் விழாவே இந்த திருக்காட்சி திருவிழா. சிறப்பாக ஞானிகளுக்கு வெளிப்படுத்தியதையே இன்றைய தினம் திருச்சபை நம்மை தியாணிக்க அழைக்கிறது.
ஞானிகளின் மூன்று அன்பளிப்புகளை வைத்து பாரம்பரியம் மூன்று ஞானிகள் இயேசுவை சந்திக்க வந்தனர் என்று சொன்னாலும் நற்செய்தி ஞானிகளின் எண்ணிக்கையை சொல்லவில்லை.
பாரம்பரியம் இந்த மூன்று ஞானிகளுக்கும் மெல்கியாஸ், கஸ்பார், பல்தசார் என்று பெயர்கள் கூட சூட்டியுள்ளது. இது தவிர தற்போது நான்காவதாக மனதை உருக வைக்ககூடிய இக்காலத்திற்கு தேவையான அர்த்தபன் என்ற ஞானியின் கதையை ஹென்றி வேன் டைக் என்பவர் எழுதியுள்ளார்.
அந்த கதையை படிக்கவோ அல்லது வீடியோவாக பார்க்கவோ வேண்டுமெண்றால் கீழெ உள்ள லிங்கை பயன்படுத்தவும்
சில சிந்தனைகள்
- ஞானிகள் ஓரெ ஒரு நட்சத்திரத்தை மட்டும் நம்பி கடினமான பயணத்தை மேற்கொண்டு இயேசுவை சந்தித்தனர். நமது வாழ்வும் ஒரு பயணம். திருச்சபை, இறைவார்த்தை, வழிபாடுகள் என்று பல நட்சத்திரங்கள் நமக்கு இன்று வழிகாட்டுகின்றன. ஆனால் நமது பயணம் இயேசுவை நோக்கிய பயணமாக உள்ளதா?
- ஞானிகள் கொண்டு வந்த ஒவ்வொரு அன்பளிப்பும் இயெசுவைப் பற்றிய அவர்களது புரிதலை வெளிப்படுத்துகின்றது. (பொன் இயேசுவின் அரசத்தன்மையையும், வெள்ளைப்போளம் மனிதத் தன்மையையும், தூபம் கடவுள் தன்மையையும் குறிக்கின்றது) இன்று நாம் இயேசுவுக்கு ஒரு அன்பளிப்பு கொடுக்கவேண்டுமென்றால் எதை அன்பளிப்பாக கொடுப்பேன், அது இயேசுவைப் பற்றியெ எத்தகைய புரிதலை வெளிப்படுத்தும்?
- இயேசுவை ச்ந்தித்த ஞானிகள் திரும்பிச் செல்லும் போது வேறு வழியில், புதிய வழியில் சென்றனர். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை கொண்டாடிய நமது வாழ்வு இப்புதிய ஆண்டில் புது வழியில் செல்கிறதா? அல்லது பழைய வழியிலேயே வாழ்கிறோமா?
வெளிப்படுத்திய இறைவனை பிறருக்கும் வெளிப்படுத்த இவ்விழா அழைக்கிறது.
பென்சி sss
02.01.11

No comments:
Post a Comment