எசா8:23-9:3 1கொரி1:10-13,17 மத் 4:12-23
இன்றைய முதல் வாசகம் நாடு கடத்தப்பட்டு, துன்பத்திலும் துயரத்திலும் வாடிக்கொண்டிருந்த இஸ்ராயேல் மக்களுக்கு, இருளில் நடப்போர் ஒளியை காண்பர் என்ற நற்செய்தியை இறைவாக்கினர் எசாயா அளிக்கிறார்.
நற்செய்தி வாசகம் நமக்கு இயேசுவின் பணி வாழ்வின் துவக்கத்தைப் பற்றி கூறுகின்றது. கலிலேயாவில் இயேசு தன் பணியை துவங்குவதற்கு பல காரணங்களை விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
- சிறிய கடற்கரை நகரம் ஆனால் அதிக மக்கள் வாழ்ந்த பகுதி
- கலிலேயா ஒரு கலகக்கார நகரமாக அறியப்பட்டிருந்த்தது
- மக்களின் வாழ்வு முறை பாவ வழியில் இருந்த்தது
- அங்கு வாழ்ந்த்த யூதர்கள் கூட மதத்தின் சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
· ஆக இயேசு தன் பணி வாழ்வை சவால் நிறைந்த பகுதியில் துவங்குகின்றார்.
· தான் மட்டும் பணியை தொடரவில்லை, மாறாக இணைந்து பணியாற்றவும், தனக்குப் பின் தன் பணியை தொடரவும் சீடர்களை அழைக்கின்றார்.
· அழைக்கப்பட்ட சீடர்களும் உடனே அழைப்புக்கு செவிசாய்க்கின்றார்கள். மனிதனின் தனி வாழ்விலும், சமூக வாழ்விலும் வாழ்வாதாரமும், உறவாதாரமும் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் இன்றைய நற்செய்தியில் பேதுருவும், அந்திரேயாவும், யாக்கோபும், யோவானும் உடனே (இவ்வார்த்தை இருமுறையும் 20,22 வருகின்றது) தங்களின் படகையும், உறவையும் (வாழ்வாதாரத்தையும், உறவாதாரத்தையும்) விட்டு விட்டு இயேசுவை பின்பற்றினர்.
நம் வாழ்வுக்கு...
■ நமது பணி வாழ்வுக்கு சவாலான சூழலை விரும்புகிறோமா அல்லது சாதாரண் சூழலை விரும்புகிறோமா?
■இணைந்து பணியாற்ற விரும்புகிறோமா? அல்லது தனித்து பணியாற்ற விரும்புகிறோமா?
■ யாரை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றோம்? இயேசுவையா? உலகையா?
பென்சி sss
21.01.11

No comments:
Post a Comment